உச்சகட்டம்.. மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கணவன்!
Orgasm Man takes video of wife bathing and demands money
மனைவியை கண்காணிக்க அரசு ஊழியர் தனது வீட்டின் குளியலறை உள்பட அனைத்து அறைகளிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி வீடியோ எடுத்து கணவன் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த அரசு ஊழியருக்கும் , அதே ஊரில் அரசு ஊழியராக பணியாற்றிவரும் பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்லற வாழ்க்கை மகிழ்சியுடன் கழிந்தது வந்தது , மனைவியும் அதே ஊரில் அரசு ஊழியராக பணியாற்றிவரும் நிலையில் மனைவியின் மீது கணவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் இவர்களது குடும்ப வாழ்க்கையில் சந்தேக புயல் வீசத் தொடங்கியது.அடிக்கடி மனைவி மீது சந்தேக பட்ட கணவன் தனது மனைவியை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்,
இதற்காக தனது வீட்டின் குளியலறை உள்பட அனைத்து அறைகளிலும் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் கணவன் குடும்பத்தினர் வரதட்சணையாக பணம் மற்றும் புதிய கார் வேண்டும் என்று கேட்டு அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும் , மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு கணவன் அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என அவரது மிரட்டியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு ஊழியரின் வீட்டில் இருந்த கேமராக்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Orgasm Man takes video of wife bathing and demands money