தொடரும் எதிர்க்கட்சியின் அமளி...! 3 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு
Oppositions chaos continues Lok Sabha adjourned till 3 pm
நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வரும், பீகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம். இந்த விவகாரத்தைப் பற்றி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது.இதன் காரணமாக இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இதனால்,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 15வது நாளான இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதலே, இந்த விவகாரத்தால் எதிர்க்கட்சிகள் அமளியில் உள்ளனர்.
இதனையடுத்து முதலில் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. அவை மீண்டும் 12 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல மக்களவை 12 மணிக்கு கூடியதும் பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மக்களவை பிற்பகல் 3 மணி வரை 2 -வது முறையாக ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையில், இன்று மக்களவையில் தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, 2025 பரிசீலித்து நிறைவேற்றப்பட இருக்கிறது.இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இச்சட்டத்தை முன்மொழிந்தார். மேலும், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்புச் சட்டம், 2022-ல் திருத்தங்களையும் அவர் முன்மொழிய இருக்கிறார்.
English Summary
Oppositions chaos continues Lok Sabha adjourned till 3 pm