அடுத்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் - ராணுவ அமைச்சகம் தகவல்.! - Seithipunal
Seithipunal


அடுத்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் - ராணுவ அமைச்சகம் தகவல்.!

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு தின விழா மிக பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு டெல்லியில் இந்தியாவின் ராணுவ வலிமையையும், கலாசார பெருமையையும் பறைசாற்றும் வகையில் பிரமாண்ட அணிவகுப்பு நடப்பட்டு வருகிறது. 

மேலும், இந்த அணிவகுப்பில் மாநிலங்களின் கலாசார பாரம்பரியத்தை விளக்கும் வகையில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம் பெறுகின்றன. இந்த அணிவகுப்பில் கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் மட்டுமே இடம் பெற்ற சில குழுக்கள் பங்கேற்றுள்ளன. 

அதுமட்டுமல்லாமல், ஆண்கள் மட்டும் இடம்பெற்ற குழுவுக்கு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கியுள்ளனர். இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், முற்றிலும் பெண் குழுக்களை மட்டுமே பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதாவது, குடியரசு தின விழாவில் அணிவகுத்து செல்லும் குழுக்களிலும், பாண்டு வாத்திய குழுக்களிலும், அலங்கார ஊர்திகளிலும் முற்றிலும் பெண்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். 

அதேபோல் இதர கலாசார நிகழ்ச்சிகளிலும் பெண்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக ராணுவ அமைச்சகம் முப்படைகள், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

only womans participate parade in republic day at next year


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->