இந்திய சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகம்: அதன் விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன..? விபரங்கள் உள்ளே..!
OnePlus 15 smartphone launched in the Indian market
உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இதை ப்ரீமியம் மாடல் போனாக சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டுள்ள ஒன்பிளஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. கடந்த 2013-இல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் 15 போன் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஒன்பிளஸ் போனின் டிஸ்பிளே, ப்ராசஸர் உள்ளிட்டவை ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங்கின் போது ஸ்மார்ட்போன்கள் சூடாவது உண்டு. அதை தடுக்கும் வகையில் 360 கிரையோ-வெலாசிட்டி கூலிங் சிஸ்டம் இந்த போனில் இடம்பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் 15 சிறப்பு அம்சங்கள்:
6.78 இன்ச் டிஸ்பிளே.
ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரேஷன் 5 சிப்செட்.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்.
50+50+50 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது.
32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா.
4கே வீடியோ ரெக்கார்டிங், ஆட்டோ போக்கஸ் அம்சமும் இதில் உள்ளது.
7,300mAh பேட்டரி.12 / 16 ஜிபி ரேம்.
256 / 512 ஜிபி ஸ்டோரேஜ்.
120 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது.
வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் உள்ளது.
மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
5ஜி நெட்வொர்க்.
யுஎஸ்பி டைப்-சி போர்ட்.
பல்வேறு ஏஐ அம்சங்களை இந்த போன் கொண்டுள்ள, இதன் போனின் விலை ரூ.72,999 முதல் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
OnePlus 15 smartphone launched in the Indian market