#BigBreaking || ஒமைக்ரான் பாதிப்பு 57 ஆக உயர்வு.! இரவு நேர ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்ட கேரள மாநில அரசு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் வரும் 30 ஆம் தேதிமுதல், ஜனவரி 2 ஆம் தேதிவரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பாதிப்பில், இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தலைநகர் டெல்லியில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஒமைக்ரான் குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் முதல் ஊரடங்கு அறிவிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து, உத்திரப் பிரதேசம், கர்நாடக, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு 11 முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கேரளாவில் வரும் 30 ஆம் தேதிமுதல், ஜனவரி 2 ஆம் தேதிவரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஓமைக்ரான் பாதிப்பு 57 என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OMICRON ISSUE KERALA LOCKDOWN


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->