அடி தூள் கிளப்பும் ஓலா ஸ்கூட்டர்., முதல் நாளே குவிந்த மக்கள்.! ஒரு கோடியில் ஒரு லட்சம் இப்பவே காலி.! - Seithipunal
Seithipunal


இந்திய மக்களால் பெரிதாக எதிர்பார்க்கப்படும் ஓலா இருசக்கர வாகனத்தின் முன்பதிவில் முதல் நாளே 1 லட்சம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

ஓலா நிறுவனம் தனது முதல் இருசக்கர வாகனத்தை (மின்சாரம்) விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய விறுவிறுப்புடன் தயாராகி வருகிறது.

1 கோடி வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், மின்சார இருசக்கர வாகனத்திற்காக உலகின் மிகப்பெரிய சார்ஜிங் நெட்ஒர்க் அமைப்புகளையும் உருவாக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் விரைந்து முடித்து வருகிறது. 

ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் ஓலா தொழிற்சாலையில் தயார் செய்யப்பட்ட புதிய வாகனத்தில் பயணம் செய்து, அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பிற விபரங்கள் தொடர்பான தகவலை தெரிவித்து கூறியிருந்த வீடியோ இணையங்களில் பெரும் வைரலானது. இதனால் இன்னும் 1 முதல் 2 வாரத்தில் இந்திய சந்தையில் ஓலா நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

வருடத்திற்கு 20 இலட்சம் ஸ்கூட்டர்கள் என்ற அடிப்படையில் உற்பத்தி செய்து, உலகின் முன்னணி நிறுவனமாக ஓலா திகழும் என்றும், இதனால் சுமார் 10000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ஓலா தெரிவித்துள்ளது. மேலும், ஓலாவின் சார்ஜிங் நெட்ஒர்க் உலகளவில் மிகப்பெரிய சார்ஜிங் நெட்வொர்க்காக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

வலுவான ஹைப்பர் சார்ஜிங் நெட்ஒர்க் மூலமாக 18 நிமிடத்தில் வாகனத்தின் 50 விழுக்காடு பேட்டரி திறன் பூர்த்தி செய்யப்படும் என்றும், சார்ஜிங் நெட்வொர்க் அமைப்புகள் 400 நகரங்களில் ஒரு இலட்சம் சார்ஜிங் பாயிண்ட்டுடன் நிறுவப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவிலேயே மலிவு விலையில் கிடைக்கும் ஸ்கூட்டராக அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓலா ஸ்கூட்டரின் விலை ரூ.1 இலட்சம் வரையில் இருக்கலாம் என்றும், அனைத்து விதமான மக்களும் பயன்பெறும் வகையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தெரியவருகிறது. 

இந்நிலையில், இந்த வாகனத்தின் முன்பதிவு நேற்று தொடங்கியது. தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓலா மின்சார ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

விருப்பம் உள்ளவர்கள் ஓலா நிறுவனத்தின் வலைத்தளத்தில் ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம், இந்த தொகையை முழுவதையும் திரும்பபெற்றுக்கொள்ளலாம் என்றும், இந்த மாதத்திலேயே ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OLA SCOOTER RESERVATION


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal