நாடு முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி வங்கிகள் இயங்காது - அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கி ஊழியர்கள் வரும் நவம்பர் 19ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், தெரிவித்திருப்பதாவது,

வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் வங்கி நிர்வாகங்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதாகவும், இரு தரப்பிலும் கலந்தோசித்து முடிவெடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டன. இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்துள்ளது.

மேலும், மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளையும் வங்கி நிர்வாகங்கள் கடைப்பிடிப்பது இல்லை எனவும் நிர்வாகம் - பணியாளர் உறவை அலட்சியப்படுத்துகின்றனர்.

இத்தகைய செயல்களில் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் பரோடா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, சோனாலி வங்கி, பெடரல் வங்கி, கனரா வங்கி, கத்தோலி சிரியன் வங்கி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக நாடு முழுவதும் வரும் நவம்பர் 19 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

November 19 bank employees strike


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->