மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை.! 
                                    
                                    
                                   Notorious criminal from Madhya Pradesh killed in encounter
 
                                 
                               
                                
                                      
                                            மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆனந்த் சாகர், ஜாவுன்பூர், அசாம்கார், வாரணாசி மற்றும் மத்திய பிரதேசத்தின் சாட்னா போன்ற இடங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆனந்த் சாகர், ஒருவரை கொலை செய்து அவரிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து ஜாவுன்பூருக்கு தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் உத்தரபிரதேச போலீசார், மத்திய பிரதேச போலீசாருடன் இணைந்து தப்பிச்சென்ற ஆனந்த் சாகரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆனந்த் சாகர், பக்ஷா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலிகஞ்ச் மார்க்கெட் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜான்பூர்-லக்னோ சாலையில், தப்பி ஓட முயன்ற ஆனந்த் சாகரை சூட்டு பிடித்தனர். 
இதைத்தொடர்ந்து காயமடைந்த ஆனந்த் சாகரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்த் சாகர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Notorious criminal from Madhya Pradesh killed in encounter