முடிவுக்கு வர போகும் பல ஆண்டுகள் பிரச்சனை... பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கழிவுகள் அகற்ற 100% இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்..!!

மத்திய பாஜக அரசின் 2023-2024ம் நிதியாண்டிற்கான கடைசி முழு பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்களில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. 

ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கான உற்சாக வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனின் இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் இனி இந்தியாவில் இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் "கழிவுநீர் கால்வாய்கள், தொட்டிகள் சுத்திகரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்கு இனி மனிதர்களுக்கு பதிலாக 100% இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்'' என அறிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தூர்வாரும் பணிகளில் மட்டும் 350க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கழிவுகளை மனிதர்கள் கொண்டு அகற்றும் முறை இந்தியாவில் இருந்து ஒழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmala sitaraman announced 100per machines will be used to remove waste


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->