தேர்வுத் தாளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் - 9 ஆம் வகுப்பு மாணவன் எழுதிய பகீர் பதில்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜஜ்பூரில் இயங்கி வரும் பிரஹலாத் சந்திர பிரம்மச்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 95 மாணவர்கள் சமஸ்கிருத பாடத்தை தேர்வு செய்து படித்து வருகின்றனர். ஆனால், அந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், இந்தப் பள்ளியில் இருந்த சம்ஸ்கிருத ஆசிரியரும் வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டதனால், கடந்த ஐந்து மாதங்களாக சம்ஸ்கிருத வகுப்பு நடத்தப்படவில்லை. அதேபோல், வரலாறு, புவியியல் பாடங்களை நடத்தவும் ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி நிர்வாகம் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சம்ஸ்கிருத பாடத்தேர்வு எழுதியுள்ளார். அதில், ''தங்களுக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியர் இல்லை. அதனால், எங்களுக்கு என்ன தெரியுமோ அதை எழுதுகிறோம். எங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள்'' என்று எழுதியுள்ளார். 

இதை கவனித்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெற்றோர், மாநில அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதாக கூறி வருகிறது. ஆனால், ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nineth class student wrote shock answer in exam paper


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->