குறைந்து வரும் கொரோனா பரவல்..!! கேரளாவில் தளர்வுகள் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கொரோனா பரவல்கள் குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகளை அம்மாநில அரசு அளித்துள்ளது

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கேரள மாநிலத்தில் மட்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. ஒரு நாளைக்கு சுமார் 30,000 பேர் தொற்றுக்கு உள்ளாயினர். இந்நிலையில், தற்போது அங்கு பரவல் குறைந்து வரும் நிலையில், அங்கு விதிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்துள்ளது கேரள அரசு.

அதன் படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஊரடங்கு ஆகியவற்று தளர்வுகள் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆசிரியர்களும் மாணவர்களும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளா பயணத்தை அவசர காரணங்கள் இல்லையெல் தவிர்க்க வேண்டுமென கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

night curfew canceled in kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->