இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, வாரணாசியில் நடைபெற்ற வர்த்தக இணைப்பு மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

இந்த மாநாட்டிற்கு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தலைமை வகித்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  தெரிவித்துள்ளதாவது: "ஆன்மீகம், வர்த்தகம், கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறை, மொழி உள்ளிட்ட அனைத்தும் இணைந்த ஒரு சங்கமம்தான் காசி தமிழ் சங்கமம். 

இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல, வர்த்தகம், பழக்கவழக்கம், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட ஒரு நாடாகும். இதனை மனதில் கொண்டு "கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்" என்று பாரதியார் பாடினார். நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது கங்கை நதி என்று மகாத்மா காந்தி 1909-ல் இந்து ஸ்வராஜ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். 

மேலும், அந்த புத்தகத்தில் "மொழிகளும், பழக்க வழக்கங்களும் வேறு வேறாக இருப்பின், தங்களுக்குள் ஒற்றுமை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என்று  அந்த நூலில் காந்தி தெரிவித்துள்ளார். இதனை தற்போது காசியில் காண முடிகிறது. 

அதேபோல், "காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மீகம் தான் இருக்கிறது". தொன்மையான கலாச்சாரத்துடன் இந்தியாவை காசி இணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயல்பு. 

இந்த விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர்"என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near varanasi Trade Link Conference for kasi tamil sangamam tuklak teacher press meet


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->