உத்தரகாண்ட் : தொடர் நிலச்சரிவால் வேறு இடங்களுக்கு செல்லும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், இங்கு திடீரென அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சுமார் 570 வீடுகள் விரிசல் ஏற்பட்டும், பல வீடுகள் மண்ணில் புதைந்தும் இருப்பதால் அந்தப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பாதுகாப்பற்ற சூழல் காரணமாக இதற்கு முன்பு 60 குடும்பங்கள் அப்பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, 29 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், 500 குடும்பங்கள் பாதுகாப்பற்ற வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர். மேலும், இந்த நிலச்சரிவால் மூன்று ஆயிரத்திறகும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து, வீடுகள் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் 4,000 ரூபாய் மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்" என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttarkhand peoples moving to other place for land slide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->