உ. பி : குடியரசுதின விழாவில் மத கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் - வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் நாட்டின் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு  நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிக் கல்லூரிகள், பொது இடங்கள் என்று அனைத்து இடங்களிலும் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. 

அந்த வகையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகாரில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது, தேசிய மாணவர் படையில் இருந்த சில மாணவர்கள் கொடிக்கம்பம் முன் நின்று அல்லா ஹூ அக்பர் என்று கோஷம் எழுப்பினர்.

இந்த வாசகத்தில் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியா ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் மற்றொரு தரப்பு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பு நின்று "பாரத மாதா கி ஜெய்", "வந்தே மாதரம்" என்ற கோஷங்களை எழுப்பிய மற்றொரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது .

இந்த சம்பவம் தொடர்பாக, வாஹிதுஷமான் என்ற பிஏ முதலாம் ஆண்டு மாணவனை பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near uttar pradesh students religious slogans raised in republic day function


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->