மத்திய பிரதேசம் : வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.5 கோடி மதிப்புடைய தங்கம் கொள்ளை.! - Seithipunal
Seithipunal


நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கட்னி மாவட்டத்தில் தங்கநகைக் கடன் வழங்கும் வங்கியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து கட்னி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே ஜெயின் தெரிவித்ததாவது, "இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து ஆயுதம் ஏந்தியபடி வந்த ஆறு  கொள்ளையர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி வங்கியில் உள்ள மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கிட்னி மாவட்டம் பார்கவான் பகுதியில் அமைந்துள்ள இந்த வங்கியில் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் 4 முதல் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தையும் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து வங்கி அதிகாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள 16 கிலோ தங்கத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றதாகக் கூறும் தகவல்கள் குறித்துக் கேட்டதற்கு, கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தின் எடை குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 

இந்தக் கொள்ளையர்கள் அனைவரும், 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று  அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mathya pradesh other state peoples robbery in bank


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->