மத்திய பிரதேசம் : சேவல் கூவியதால் காவல் நிலையத்தில் புகாரளித்த மருத்துவர்.! - Seithipunal
Seithipunal


பொதுவாக கிராமப்புறங்களில் அக்கம்பக்கத்தில் ஏதேனும் பிரச்சினை நடந்தால் அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் ஏதாவது நடந்தால் போலீசிடம் புகார் அளிப்பது வழக்கம். 

ஆனால், முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் பக்கத்து வீட்டுக்காரரின் சேவல் கூவியதால் அதன் சத்தம் தங்க முடியாமல் மருத்துவர் ஒருவர் காவல் துறையை நாடியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்தூரைச் சேர்ந்தவர் அலோக் மோடி என்ற மருத்துவர். இவர் பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் மருத்துவமனை அருகே வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "எனது அண்டை வீட்டில் உள்ள பெண் ஒருவர் கோழி, சேவல் உள்ளிட்டவற்றை வளர்த்து வருகிறார். அந்த சேவல் கோழிகள் தினமும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் தவறாது கூவுகிறது. 

இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு தாமதமாக வந்து ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கும் போது சேவல் கூவி தூக்கத்தை கலைத்து விடுகிறது. அது முற்றிலும் இடையூறாகவும், எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார். 

இந்தப் புகாரை உறுதிப்படுத்திய சஞ்சய் சிங் தெரிவித்ததாவது, "முதலில் இருதரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்துவதில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டால், இந்த சிக்கலை தீர்ப்பதற்கு குற்றவியல் நடைமுறையை பின்பற்றுவோம் என்றும், பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madhya pradesh doctor petition for rooster crowed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->