பெற்ற குழந்தையை பாத்ரூமில் வீசிய தாய் - கேரளாவில் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


பெற்ற குழந்தையை பாத்ரூமில் வீசிய தாய் - கேரளாவில் அதிர்ச்சி.!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டம் கோட்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்ததனால் அவர் தன மூத்த மகனுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றார். 

அங்கு அவர் மருத்துவர்களிடம் தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இப்போது ரத்த போக்கு அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அவரது மகன், அம்மாவுக்குப் பிறந்த குழந்தை கழிவறையில் வீசப்பட்டதாக தெரிவித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர் குழந்தைகள் நல அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது குழந்தை கழிவறையில் ஒரு பக்கெட்டுக்குள் அழுது கொண்டிருந்தது. உடனே அவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு குழந்தை உயிர் பிழைத்தது. அதன் பின்னர் அந்த குழந்தையை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தத்து எடுத்துக்கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், "பிறந்த சில நிமிடங்களில் தாயாரால் தூக்கி வீசப்பட்ட குழந்தையை மீட்டு உயிர் பிழைக்க வைத்த  மருத்துவர்கள் மற்றும் போலீசாரை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala mother threw born baby in toilet


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->