இன்ஸ்டாகிராமில் வேறொரு இளைஞருடன் பேசிய காதலி - காதலன் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டம் உர்ஜாநகரில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளி கூடத்தில் பயிலும் மாணவர் ஒருவர் அதேவகுப்பில் பயிலும் மாணவியை காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், அந்த மாணவி பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெறொரு இளைஞருடன் பேசி வந்துள்ளார். இதையறிந்த அந்த மாணவன் மிகுந்த ஆத்திரமடைந்தார். இந்த நிலையில், அந்த மாணவி கடந்த புதன்கிழமை மாலை ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக தனது நண்பர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். 

அப்போது காதலனான மாணவன் அந்த மாணவியை வழிமறைத்து இன்ஸ்டாகிராமில் வேறொரு இளைஞருடன் பேசியது குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் காதலியை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதில், அந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கிடையே ஹோலி பண்டிகை கொண்டாட சென்ற தனது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த மாணவியின் உடல் கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, மாணவி பிணமாக கிடந்த இடத்திற்கு அருகே மாணவியின் செல்போனும் அவரை கொலை செய்வதற்கு பயன்படுத்திய இரும்பு கம்பியும் கிடந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு மாணவியை கொலை செய்த மாணவனை கைது செய்தனர். 

இதைதொபிடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அந்த மாணவன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jarkant school student arrested for kill girl friend


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->