நீதிபதியை கடிதம் மூலம் மிரட்டிய இளைஞர் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூரை சேர்ந்த பெண் நீதிபதி ஒருவருக்கு கடந்த மாதம் ஏழாம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அந்த பார்சலை வாங்கிய நீதிபதியின் உதவியாளர் அதனை நீதிபதியிடம் கொடுத்துள்ளார்.

நீதிபதியும் அந்த பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அந்த பார்சலில் ஒரு ஸ்வீட் பாக்ஸ் மற்றும் ஒரு கவரும் இருந்துள்ளது. இதையடுத்து நீதிபதி அந்த கவரையும் பிரித்துள்ளார். 

அதில் அவரை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் இருந்துள்ளது. மேலும், அதில்,ரூபாய் 20 லட்சம் தரவில்லை என்றால் இந்த புகைப்படங்களை சமூகவலை தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இதேபோல், பிப்ரவரி 27ம் தேதியும் நீதிபதிக்கு வேறொரு பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலிலும் அதேபோல் புகைப்படங்கள் இருந்துள்ளது. இதைப்பார்த்து  அதிர்ச்சியடைந்த நீதிபதி இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, போலீசார் நீதிமன்றத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து பார்சல் கொடுத்த நபரை அடையாளம் கண்டு தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near jarkant man threat to female lawyer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->