போதைப்பொருள் வாங்க பணம் தராததால் தந்தையை கொன்ற மகன்..!  - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியின் சுபாஷ் பிளேஸ் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் மகன் அஜய். இவர் போதைப்பொருள் வாங்குவதற்காக தந்தை சுரேஷிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் மறுப்புத் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அஜய் அவரை அடித்துக்கொன்றுள்ளார். 

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர்.

அங்கு, சுரேஷ் காதில் ரத்தம் வந்த நிலையில், படுகாயங்களுடன் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து, போலீசார் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரனையில், போதை பொருள் வாங்குவதற்கு பணம் தர மறுத்ததால், அஜய் தனது தந்தையை தாக்கியது தெரியவந்தது. அதன் பின்னர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அஜய் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near delhi son kill father for give money to buy drugs


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->