ஆந்திரா : விடுதியில் உணவு சாப்பிட்ட 24 மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள கொத்தவலசா மாவட்டத்தில் ஒரு பெண்கள் விடுதியில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். அந்த விடுதியில் வழக்கம் போல், மாணவிகளுக்கு காலை உணவாக புளியோதரை வழங்கப்பட்டது.

 

இதை சாப்பிட்ட மாணவிகள் திடீரென வாந்தி எடுத்துள்ளனர். இதைப்பார்த்த சக மாணவிகள் விடுதி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி, விரைந்து வந்த விடுதி நிர்வாகிகள் உடனடியாக மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில், ஆறுக்கும் மேற்பட்ட மாணவிகள் மேல் சிகிச்சைக்காக சுருங்கவரப்பு சமூக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, 14 மாணவர்கள் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள பத்து பேமாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொடர்ந்து மாணவிகளின் உடல்நிலைமையை கண்காணித்து வருவதாக விடுதி வார்டன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அதன் பின்னர் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவினை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வில் மாணவிகள் அசுத்தமான உணவு சாப்பிட்டது தெரியவந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near andhira twenty four students admitted hospital for food poison in hostel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->