நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய தந்தை, மகன்.. அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்பா நடனமாடிய மகன் உயிரிழந்த அதிர்ச்சியில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் விரார் நகரில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு கர்பா எனப்படும் பாரம்பரிய நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனிஷ் நராஜ் சோனிக்ரா (வயது 35) என்பவரும், அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா (வயது 66) என்பவரும் நடனமாடியுள்ளனர். 

இந்த நிலையில் நடனமாடி கொண்டிருந்தபோது மனிஷ் நராஜ் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை அந்த இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். 

அதன்பிறகு அவர்கள் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Navaratri festival celebration father and son death in Maharashtra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->