நாடு முழுவதும் நடைபெறவுள்ள மெகா தூய்மை பணி! மக்களுக்கு தனித்துவ அழைப்பு விடுத்த பிரதமர்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் சுகாதார சேவை என்ற பெயரில் பிரம்மாண்டமாக தூய்மை பணி செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 

இந்த பிரச்சாரம் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நடக்கிறது. அதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பொது இடங்களில் அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு மெகா தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என்றும், தூய்மை பணியில் பொதுமக்கள் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கி கலந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் அழைப்பு விடுத்திருந்தார். 

இது தொடர்பாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பிரதமர் மோடி காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்களுக்கு தனித்துவமான அழைப்பு விடுத்துள்ளார். 

அதன்படி மெகா தூய்மை பணி அக்டோபர் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். நாடு முழுவதும் உள்ள மார்க்கெட் பகுதி, ரயில்வே தண்டவாளம், நீர்நிலைகள், சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட பல்வேறு பொது இடங்களில் தூய்மை பணி நடைபெறும்.

இந்த தூய்மை பணியில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகள், ரயில்வே தகவல் தொழில்நுட்பம் போன்ற மத்திய அரசு துறைகள் பொது நிறுவனங்கள் ஆகியவை தூய்மை பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

இவற்றை நடத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nationwide mega cleanliness October 1st Prime Minister called people 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->