குருவாயூர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு.!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 

விரதம் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த அதே நாளில் மகாராஷ்டிராவில் உள்ள கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்கு சென்ற மோடி கோவிலை சுத்தம் செய்து பிரார்த்தனை செய்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று ஆந்திர மாநிலம் லேபர் சி பகுதியில் உள்ள வீரபத்திரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்நிலையில் இன்று கேரள மாநிலம் சென்ற பரந்த பிரதமர் நரேந்திர மோடி குருவாயூரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்ய வர உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Narendra Modi worship in guruvayoor Krishna temple


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->