மும்பை : ஊடகங்களில் பேச மாநகராட்சி அதிகாரிகளுக்கு தடை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மாநகராட்சி் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"மும்பையில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாநகராட்சிக்கு சம்மந்தப்பட்ட கூடுதல் கமிஷனர்கள் மட்டுமே ஊடகங்களில் பேச வேண்டும். அவர்களுக்கு மட்டுமே ஊடகங்களில் பேசும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

இதைத்தவிர மற்ற அதிகாரிகள் மற்றும் கூடுதல் கமிஷனருக்கு குறைந்த ஊழியர்கள் என்று யாரும் ஊடகங்களில் பேச கூடாது. அவர்களுக்கு அனுமதியும் வழங்கப்படாது. 

மாநகராட்சில் உள்ள பல துறைகளில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கமிஷனரின் உத்தரவு இல்லாமல் மாநகராட்சியின் கொள்கை முடிவு தொடர்பான தகவல்களை ஊடகங்களில் சொல்வது தெரியவந்தது.  

இதன் காரணமாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றன. இந்த தகவல்கள் மாநகராட்சி பற்றி பொது மக்கள் இடையே தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai muncipality ban to officers speach in media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->