மும்பை ஐஐடி தலித் மாணவர் தற்கொலை வழக்கில் இரண்டு மாதங்கள் கழித்து புதிய திருப்பம்! - Seithipunal
Seithipunal


மும்பை ஐஐடி கல்லூரியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தலித் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடன் படித்த சக மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவர் தர்ஷன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சார்ந்தவர். இவர் சோலங்கி மும்பை ஐஐடியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

கல்லூரி விடுதியின் ஏழாவது மாடியில் இருந்து கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி திடீரென குதித்த தர்ஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தர்ஷினின் பெற்றோர்கள் நாங்கள் தலித் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்பதால் மகனிடம் சக மாணவர்கள் ஜாதியை குறித்து பிரச்சனை ஏற்படுத்தி வந்ததாக  குற்றம் சாட்டு வைத்தனர். மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் போலீசார் இதை பற்றி மேற்கொண்டு விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மும்பை போலீசாரால் கடந்த 28 ஆம் தேதி தனிக்குழு அமைக்கப்பட்டு,  மாணவரின் பெற்றோர் உடன்படித்த சக மாணவர்கள் உட்பட 35 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

இந்த விசாரணைக்குப் பிறகு மாணவர் தர்ஷனை யாரும் கொலை எல்லாம் செய்யவில்லை. தேர்வு மதிப்பெண் குறைவாக வந்ததால் மாணவர் தர்ஷன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 

இந்நிலையில் மாணவர் தர்ஷனின் அறையில் அர்மன் என்னை கொன்றுவிட்டான் என்று எழுதிய  துண்டு சீட்டு ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதனை தடவியல் துறைக்கு  போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதில், கையெழுத்து உறுதியானதால், மாணவர் தர்ஷன் உடன் ஹாஸ்டல் ரூமில் ஒன்றாக தங்கி இருந்த சக மாணவர் அர்மான் இக்பால் காத்ரியை போலிசார் கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் இருவருக்கும் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து அர்மான் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai IIT Student suicide case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->