மும்பை: 11 சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி! தொடரும் மீட்பு பணி!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே பிளவாண்டியில் கடந்த 1984 ஆம் ஆண்டு கட்டிய 3 மாடி கட்டிடம் இருந்தது.  இக்கட்டிடத்தில் மொத்தம் 21 வீடுகள் இருந்ததாகவும் அதில் அனைத்து வீடுகளிலும் பொது மக்கள் குடியிருந்தனர்.


 
இந்த 3 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கட்டிடத்தில் குடியிருந்த அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் தூக்கத்திலேயே பலர் என்ன நடந்தது என்பது தெரியாமலேயே 8 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை இன்று மாலை வெளியிட்டுள்ள தகவலில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது. பலியானோரில் 11 பேர், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai building accident dead increase


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->