மீண்டும் ஸ்தம்பிக்க போகும் டெல்லி! தலைநகர் நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்!! - Seithipunal
Seithipunal


கடந்த 2020-ம் ஆண்டு, மூன்று  வேளாண் சட்டங்களை எதிர்த்து  விவசாயிகள்  டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினர். இந்த போரட்டம் ஏறக்குறைய ஓராண்டுக்கு மேல் நீடித்த்து. இறுதியாக வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று, சம்யுக்தா கிசான் மோர்ச்சா,கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இன்று டெல்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்திருந்தன. இதனை தொடர்ந்து, கடந்த முறை போலவே இந்த முறையும் தொடர் போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக டெல்லி நோக்கி படையெடுக்கின்றனர்.  விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய  முடியாதபடி அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் , எல்லைப்பகுதியிலேயே போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு  தொடர் போராட்டத்திற்கு  தேவையான டீசலுடன் டெல்லி நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து,  டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகளை சிறைபிடித்து தங்க வைக்க பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mīṇṭum stampikka pōkum ṭelli! Talainakar nōkki paṭaiyeṭukkum vivacāyikaḷ!! ​ 76 / 5,000 Translation results Translation result Delhi is going to stall again! Farmers invading the capital!!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->