கட்டுக்கட்டாக கிடைத்த பழைய நோட்டுகள்: விசாரணையில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், குவாலியரில் துப்புரவு தொழிலாளி ஒருவரிடம் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 47 லட்சம் என தெரியவந்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை தடுக்கும் வகையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குவாலியர் நகரத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை போலீசார் வழிமறித்து சோதனை நடத்தினர். 

அப்போது அவரிடம் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. அதில் 41 கட்டுகள் பழைய 1000 நோட்டுகளும் 12 கட்டுகள் பழைய 500 நோட்டுகளும் என மொத்த மதிப்பு ரூ. 47 லட்சம் இருந்தது. 

மேலும் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர், மொரேனா மாவட்டத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி சுல்தான் கரோசியா என்பது தெரியவந்தது. இவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பண மதிப்பு நீக்க நடைமுறைக்கு 6,7 மாதங்களுக்கு முன்பாக குப்பை தொட்டியில் இருந்து எடுத்து பின்னர் அதனை வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் பழைய நோட்டுகளை புதிய நோட்டுக்களாக தசரா பண்டிகை நாளில் மந்திரவாதி ஒருவர் மாற்றி தருவதாக தனக்கு தெரிய வந்ததால் அந்த மந்திரவாதியை பார்ப்பதற்காக செல்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து போலீசார் சுல்தான் மற்றும் அவரது கூட்டாளி இருவரையும் கைது செய்து, இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP police seized old notes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->