2023 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவை - எது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஏவப்பட்டது. இதனுடைய வெற்றி உலகமெங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்ததில், ’சந்திரயான் -3’ என்பதே இந்தியாவில் 2023ல் அதிகம் கூகுள் செய்யப்பட்டதில் முதலிடம் பிடித்துள்ளது. 

இது உட்பட 2023-ல் கூகுளில் இந்தியா அதிகம் தேடியவையான 1. சந்திரயான்-3, 2. கர்நாடக தேர்தல் முடிவுகள், 3. இஸ்ரேல் செய்திகள், 4. சதீஷ் கௌசிக், 5. பட்ஜெட் 2023, 6. துருக்கி நிலநடுக்கம், 7. அதிக் அகமது 8. மேத்யூ பெர்ரி 9. மணிப்பூர் செய்திகள், 10. ஒடிசா ரயில் விபத்து உள்ளிட்ட அனைத்தும் டாப் 10 வரிசையில் இடம் பிடித்துள்ளன.

கூகுள் தேடலில் ‘என்றால் என்ன’ என்ற தேடலில் ’ஜி20 என்றால் என்ன?’, ’சாட்ஜிபிடி என்றால் என்ன?’, ’ஹமாஸ் என்றால் என்ன?’, ’செங்கோல் என்றால் என்ன?’ உள்ளிட்ட கேள்விகள் அதிகம் இடம்பிடித்திருந்தன. இதேபோல், ‘எப்படி’ என்ற கேள்வியில், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான வீட்டு வைத்தியம், யூடியூப் சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை உயர்த்துவது, கார் மைலேஜை மேம்படுத்துவது, சரியான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை அடையாளம் காண்பது, ஆதாருடன் பான் இணைப்பு உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருந்தன.

இந்தியாவின் கூகுள் தேடலின் அடிப்படையில் 2023ம் ஆண்டின் பிரபலமான விளையாட்டு நிகழ்வுகளில், ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் உள்ளிட்டவை முதல் இரண்டு இடங்களையும், 2023ம் ஆண்டின் பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் தாரகை கியாரா அத்வானி முதலிடத்தையும் பிடித்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல், 2023 ஆம் ஆண்டின் பிரபலமான திரைப்படங்களின் வரிசையில் ஷாருக்கானின் ’ஜவான்’ படம் முதலிடமும் ரஜினி காந்தின் ’ஜெயிலர்’ 7வது இடத்தையும், விஜயின் ’லியோ’ மற்றும் ’வாரிசு’ உள்ளிட்ட திரைப்படங்கள் 8 மற்றும் 10வது இடத்தையும் பிடித்துள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

most google searched in 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->