நாட்டு மக்களிடையே உரையாற்றிய மோடி கூறியது என்ன?.. முழு விபரம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஊரடங்கு தற்போது ஆறாவது முறையாக நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நேற்றே நாட்டு மக்களிடையே இன்று (30 ஜூன் 2020) பிரதமர் மோடி உரையாற்றஉள்ளதாக தகவல் வெளியானது. 

இன்று (30 ஜூன் 2020) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் கொரோனாவின் இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. சரியான தருணத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் குறைந்துள்ளது. ஊரடங்கு 2.0 என்ற நிலைக்கு நாம் இப்போது வந்துள்ளோம். தற்போது தான் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். 

இந்தியா மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் சீராக நிலைமை இருக்கிறது. ஊரடங்கு விதிமுறையை மீறுவது மக்களின் உயிருடன் விளையாடுவதற்கு சமம். ஊரடங்கை மீறி செயல்படும் நபர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும். 

கொரோனா கட்டுப்பாடு மண்டலங்களில் எடுக்கப்படும் நடவடிக்கை இனி முக்கியமானதாக இருக்கும். ஊரடங்கு விதிமுறைகளை சிலர் மதிக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. ஊரடங்கு சமயத்தில் ஏழைகளுக்காக ரூ.1.75 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.31 ஆயிரம் கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. 

மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கைகளை கழுவ வேண்டும். ஊரடங்கு சமயத்தில் 80 லிபிடோ ,அல்ல;இல்லை ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்தியாவில் இரண்டு மடங்கு மக்கள் பலன் பெற்றுள்ளனர். கரீப் யோஜனா திட்டத்தின் மூலமாக 90 ஆயிரம் கோடி மக்கள் பலன் பெற்றுள்ளனர். 

பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் விதிமுறைகள் ஒன்றுதான். ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ கொண்டைக்கடலை, நவம்பர் மாதம் வரை 5 கிலோ அரிசி அல்லது கோதுமை விலையில்லாமல் வழங்கப்படும். விவசாயிகளும், வரி செலுத்தும் நபர்களும் நாட்டிற்கு பெரும் உதவி செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள் என்று கூறினார்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Latest press meet and Speech with indian nations


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->