சென்னை- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் மோடி! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ரயில்களில் அதிவேகப் பயணம் மேற்கொள்ள வந்தே பாரத் எனும் திட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி தற்பொழுது வரை இந்தியாவில் நான்கு வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே டெல்லி, வாரணாசி, மும்பை, அகமதாபாத், குஜராத், இமாச்சல பிரதேஷ் ஆகிய நான்கு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னிந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் சென்னையில் இருந்து மைசூர் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது. 

வந்தே பாரத் ரயில் சென்னை மைசூர் மார்க்கத்தில் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சராசரியாக மணிக்கு 73 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த ரயில் காலை 5:50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலானது காலை 7:25 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தையும் 8:30 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை கடந்து 10:30 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தை சென்று அடைகிறது. 

பெங்களூர் ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடம் இடைவேளைக்குப் பிறகு புறப்படும் வந்தே பாரத் ரயிலானது மதியம் 12.30 மணிக்கு மைசூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. பிறகு மதியம் 01:05 மணிக்கு மைசூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் 03:00 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு 04:55 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தையும் 06:00 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை கடந்து இரவு 07:35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

வந்தே பாரத் ரயிலில் பயணிக்க சலுகைகள் கிடையாது. சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு ஏசி சேர் கட்டணம் ரூ.1,275, ஏசி சிறப்பு வகுப்பு கட்டணம் ரூ.1,980 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை - காட்பாடி இடையே ஏசி சேர் கட்டணம் ரூ.495, சிறப்பு வகுப்பு கட்டணம் ரூ950, பெங்களூருக்கு ஏசி சேர் கட்டணம் ரூ.995, சிறப்பு வகுப்பு கட்டணம் ரூ.1,885 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ரயில் 16 பெட்டிகள் கொண்டது. ஒரே நேரத்தில் 1,128 பேர் அமர்ந்து செல்ல முடியும்.  சென்னை-மைசூர் இடையே வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நிறைவு பெற்ற நிலையில் இந்த திட்டத்தினை பெங்களூருவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சியை பெங்களூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi inaugurates Vande Bharat train project between Chennai Mysore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->