மோடி அரசின் சாதனை..முதுகில் ...! நவராத்திரி ஸ்பெசல் ஜாக்கெட்..!  - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் இருக்கும் பெண்கள் தங்களடைய முதுகில் மோடி அரசின் சாதனைகளை ஓவியமாக வரைந்து கொண்ட சம்பவம் தற்பொழுது வைரலாகி வருகின்றது .

இந்தியா முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது நவராத்திரி விழா. இது கோலாகலமாக தொடங்கி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத் பகுதியில் நவராத்திரி விழாவை கொண்டாடும் வகையில், பெண்கள் பலர் தங்களுடைய முதுகில் பல்வேறு வண்ண ஓவியங்களை வரைந்து கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சூரத் பகுதியில் இருக்கும் பெண்கள் சிலர் தங்களுடைய முதுகில் மோடி அரசின் சாதனைத் திட்டங்கள் பலவற்றை ஓவியமாக வரைந்து இருக்கின்றனர். 

உலகையே திரும்பிப் பார்க்க செய்த சந்திராயன்-2 திட்டத்தின் சாதனை, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்திய மக்களின் வரவேற்பை பெற்ற பிரதமர் மோடி அரசின் சாதனை, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை விவரிக்கும் வகையில் அந்தப் பெண்கள் தங்களின் முதுகில் ஓவியங்களை வரைந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

modi government achievement navarathiri special


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->