மெட்ரோ ரெயிலில் பயணித்த வாலிபருக்கு ரூ.500 அபராதம்: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், கார்ப்பரேஷன் லிமிடெட் விதிமுறையின் படி ரயில் அல்லது நடை மேடைகளில் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சுனில் குமார் என்பவர் அவரது நண்பர்களுடன் ஜெய நகரில் உள்ள அவர்களது பணி இடத்திற்கு தினமும் மெட்ரோ ரயிலில் சாம்பிகே சாலையில் இருந்து சென்று வந்தனர். 

அப்போது சுனில் குமார் மெட்ரோ ரயிலில் அமர்ந்து கொண்டு உணவு சாப்பிட்டார். இதனை அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை சுனில் குமார் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். 

இதனை அடுத்து சுனில் குமார் மீது பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் ஜெயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. 

புகாரின் அடிப்படையில் ஜெயநகர் போலீசார் சுனில் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metro train traveling teenager fine Rs 500 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->