தமிழகம் கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழகம் கர்நாடகா மாநிலங்களுக்கிடையே சுமூகமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மக்களவையில், "மேகதாதுவில் அனை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும், இந்த திட்டத்தால் எவ்வளவு கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகள் நீரில் மூழ்கும்? எவ்வளவு பேர் புலம்பெயர வேண்டும்? என்றும், சுற்றுச் சூழல் அனுமதி கொடுக்க எவ்வளவு காலம் ஆகும்? சுற்றுச் சூழல் அனுமதி வழங்க மத்திய அரசுக்கு எவ்வளவு காலம் தேவைப்படும்? அதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?" என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்த கேள்விகளுக்கு மத்திய சுற்றுச் சூழல்,வனம் மற்றும் பருவநிலை மாற்ற இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில்,

மத்திய அரசுக்கு கிடைத்த சாத்தியக் கூறு அறிக்கையின்படி, 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும், அதில் காவிரி வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட 2,925.5 ஹெக்டேர் நிலமும், பாதுகாப்பட்ட வனப் பகுதிக்குட்பட்ட 1,869.50 ஹெக்டேர் நிலமும் உள்ளடங்கும் என தெரிவித்துள்ளார். 

மேலும், சங்மா, கொங்கிட்டோடி, மடவானா, முத்ததி, பொம்மசந்தரா, உள்ளிட்ட சில கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் தமது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அனுமதியை பொறுத்தவரை, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையே சுமூகமான முடிவு எட்டப்பாட்டால் மட்டுமே அனுமது வழங்க முடியும் என்று நிபுணர் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது என்றும்,

அதே நேரத்தில் மத்திய நீர்வளத் துறை அமைச்சகமும், காவிரி மேலாண்மை ஆணையமும், மேகதாது அணையின் உத்தேச திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட பின்னரே குறிப்பு விதிமுறைகள் தொடர்பான முன்மொழிவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mekedatu Dam social settlement need


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->