டாக்டரின் தூக்கத்தை கெடுத்த கோழி.. வழக்கு தொடுத்த சம்பவம்.. அதிர்ச்சியில் உரிமையாளர்.! - Seithipunal
Seithipunal


போலீசில் எதற்கெல்லாம் புகார் கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் போய்விட்டது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு டாக்டர் கோழி கூவுகிறது என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மாறி வரும் காலகட்டத்தில் உறக்கத்தின் தேவை அதிகரித்து இருக்கிறது. ஆனால், அதை யாரும் கண்டு கொள்வதில்லை. இரவு நேர ஷிப்டுகளில் பணியாற்றும் நபர்கள் பகல் நேரத்தில் உறங்குவது வழக்கம். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்துர் பகுதியை சேர்ந்த மருத்துவரான அலோக் மோடி பலாசியா என்ற நபர் இரவு தாமதமாக தூங்குவது வழக்கம். 

எனவே அதிகாலை நேரத்தில் அவர் நீண்ட நேரம் தூங்குவாராம். அப்படி இருக்கும் பட்சத்தில் அவருக்கு பக்கத்து வீட்டு கோழியால் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் அந்தக் கோழி அன்றாடம் கூவுவது வழக்கமாம். 

இதனால் டாக்டரின் உறக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. பலமுறை இது குறித்து கோழியின் உரிமையாளரிடம் டாக்டர் கூறிய போதும், அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mathya pradesh doctor complaint against chick


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->