கடித்த பாம்பை திருப்பிக் கடித்த வாலிபர் - நொடியில் நடந்த பயங்கரம்.!
man admitted hospital bite snake in bihar
பாம்பு கடித்து மனிதர்கள் உயிரிழப்பதும், கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வருவதும் வழக்கமான ஒன்று. ஆனால், இதற்கு மாறாக பீகாரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து காண்போம்.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் லோஹர். கூலித் தொழிலாளியான இவர், வேலை முடித்துவிட்டு ரெயில் தண்டவாளம் அருகே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது, விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனே சந்தோஷ்க்கு அந்த பாம்பை திருப்பி கடித்தால், தனது உடலில் இருக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்ற மூட நம்பிக்கை இருந்தது. அதன் படி, சந்தோஷ் தன்னை கடித்த பாம்பை பிடித்து மூன்று முறை கடித்துள்ளார். இதில் அந்த விஷப்பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் சந்தோஷ் லோஹரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பிறகு உடல் நலம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்.
English Summary
man admitted hospital bite snake in bihar