பிறந்தநாளில் சாதனை - பரபரப்புக்கு மத்தியில் விராட்டுக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய லீக் போட்டியில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்த தொடரில் இதுவரைக்கும் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. 

அதே போன்று, இந்த தொடரில் மற்றொரு பலம் வாய்ந்த அணியாக உள்ள தென் ஆப்பிரிக்கா, இதுவரை விளையாடியுள்ள ஏழு போட்டிகளில் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 

இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் அந்த அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகக்கோப்பை போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகளும் இன்று களமிறங்குவதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த போட்டி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், இன்று இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha banarji birthday wish to virat kholi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->