கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து.. ஒடிசா விரையும் அதிகாரிகள் குழு.. மம்தா பானர்ஜி அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்ற கொண்டிருக்கும் பொழுது சரக்கு ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம்புரண்டு உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் தற்பொழுது வரை 132 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் "மேற்கு வங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஷாலிமார்-கோரோமண்டல் விரைவு ரயில் இன்று மாலை பாலசோர் அருகே சரக்கு ரயிலுடன் மோதியதில், வெளியூர் செல்லும் மக்கள் சிலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்/காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

எங்கள் மக்களின் நலனுக்காக ஒடிசா அரசு மற்றும் தென்கிழக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைத்து வருகிறோம். எங்களின் அவசரகால கட்டுப்பாட்டு அறை 033-22143526, 033-22535185 என்ற எண்களுடன் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டது.

மீட்பு உதவிக்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஒடிசா அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவவும் 5-6 பேர் கொண்ட குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறோம். நான் தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் நேரில் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee twit about Coromandel Express train accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->