திடீர் பேரணியை கிளப்பிய மம்தா பானர்ஜி: மத்திய அரசுக்கு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கம், முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்திற்கான மத்திய நிதிகளை உடனடியாக விடுவிக்க கோரி தொண்டர்களுடன் பேரணி சென்றார். 

மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதிகள் மேற்கு வங்கத்துக்கு விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு அளிக்க வேண்டிய ரூ. 70 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை என முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று குற்றம் சாட்டியிருந்தார். 

மேலும் மேற்கு வங்கத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதி உடனடியாக விடுவிக்கவில்லை என்றால் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் மம்தா பானர்ஜி இன்று காலை திடீரென கட்சித் தொண்டர்களுடன் ஒன்றரை கிலோ மீட்டர் சாலையில் நடந்து சென்று மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பாஜக தலைவர், மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்பட்ட மத்திய நிதியில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற்று இருப்பதால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது வெறும் தேர்தல் நாடகம் என விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee started rally Warning central government


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->