கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல சாலைகள் அமையுங்கள்.. ராஜஸ்தான் அமைச்சர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


சாலைகள் என்றால் கத்ரினா கைப் கன்னகள் போல இருக்க வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறியது வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் மந்திரி சபை மாற்றம் செய்யப்பட்டது. இதில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா மந்திரி சபையில் இடம் கிடைத்தது.

பதவியேற்ற பிறகு இவர் அவரது தொகுதிக்கு சென்று மக்களிடையே உரையாற்றினார். அவர் அந்த தொகுதி மக்கள் அவரிடம் தரமான சாலைகள் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனே அவர் அருகில் இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரிடம் அமைக்கும் சாலைகள் கத்ரினா கைப்பின் கன்னங்கள் போல இருக்க வேண்டும் என வேடிக்கையாக கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Make Roads Like Katrina Handicraft Cheeks Rajasthan Minister Speech


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal