தாலியம் விஷம்! மொத்த குடும்பத்தையும் கொலை செய்த மருமகள்! வெளியான அதிர்ச்சி பின்னணி! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில், கணவன் உட்பட குடும்பத்தின் ஐந்து பேரை விஷம் வைத்து கொலை செய்த வழக்கில், மனைவி உட்பட இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அடுத்த கட்சிரோலியின் மகாகாவ் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் அண்மையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையின் முடிவில், அதே கிராமத்தை சேர்ந்த சங்கமித்ரா கும்பாரே, ரோசா ராம்தேக்கே ஆகிய 2 பேனாக்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அண்மையில் சங்கமித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதற்க்கு தனது கணவர் ரோஷன், மாமனார் சங்கர், மாமியார் விஜயா, மாமியாரின் தங்கை வர்ஷா உராடே, ரோஷனின் தங்கை கோமல் தாஹேகாவ்கர் ஆகியோர் கரணம் என எண்ணிய சங்கமித்ரா, அவர்களை பழி வாங்க சங்கமித்ரா முடிவு செய்துள்ளார்.

அதன்படி, தோழியான ரோசாவை கூட்டு சேர்த்துக் கொண்டு, தெலங்கானா சென்று தாலியம் விஷத்தை வாங்கி வந்த சங்கமித்ரா, அந்த விஷத்தை சங்கமித்ரா உணவில் கலந்து, தனது மாமியார் வீட்டினருக்குக் கொடுத்துள்ளார். 

இதில், 5 பேருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் சில நாட்களிலேயே 5 பேரும் இறந்தனர். 

மேலும், சங்கமித்ராவின் தோழி ரோசாவும், சொத்து விவகாரத்தில் தனது கணவரின் 4 சகோதரிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரிடமும் போலீசார் மேலும் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastara crime case


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->