கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதியான பெண் மாயம்.. அலட்சியமாக பதில் கூறும் அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேயை சார்ந்த 33 வயது பெண்மணிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கடன்ஹட்ட மாதம் 29 ஆம் தேதியன்று புனேயில் உள்ள பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

ஆனால், இவர் திடீரென மாயமானதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 5 ஆம் தேதியே பெண்மணியை இல்லத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், பெண்ணின் தாயார் தெரிவித்ததாவது, " எனது மகள் மருத்துவமனையில் அனுமதியான மறுநாளே மகளை பார்க்க வந்த சமயத்தில், மகள் பாதுகாப்பாக இருக்கிறார்.. நீங்கள் 15 நாட்கள் கழித்து வாருங்கள் என்று தெரிவித்தனர். 

அவர்கள் கூறியவாறே காந்த 13 ஆம் தேதி இங்கு வருகையில் எனது மகள் காணவில்லை. அவரை அவசர ஊர்தி மூலமாக வீட்டிற்கும் அனுப்பி வைக்கவில்லை. எனது மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருக்கிறேன் " என்று கூறினார். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Thane 33 year old girl missing quarantine ward relations protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->