மஹாராஷ்டிரா ஓபன், ராம் குமார் போபன்னா இணை அரையிறுதிக்கு முன்னேற்றம் - Seithipunal
Seithipunal


மகாராஷ்ட்ரா ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மகாராஷ்டிராவின் புனே நகரில் மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ராம்குமார் ராமநாதன்-ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர், செக் குடியரசின் ஜிரி வெஸ்லி ஜோடியை 7-6 (7/3) 7-6 (7/4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

இத்தாலியின் கியான்லுகா மாகெர், பின்லாந்தின் எமில் ருசுவோரி ஜோடி போட்டியில் இருந்து விலகிய காரணத்தால், மற்றொரு இந்திய ஜோடியான விஷ்ணுவர்தன்-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி இத்தாலியின் ஸ்டெபானோஸ் டிரவாக்லியாவிடம் 3-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Open Tennis Ramkumar and Rohan Bopanna enters semi finals


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->