கண்முன்னே நோயாளிகள் கண்ணீர் கஷ்டம்.. உதவ முடியாத சூழலில் நாங்கள் - மருத்துவர் கண்ணீர் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இந்திய அளவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மும்பை சார்ந்த பெண் மருத்துவர் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை தொற்று நோய் நிபுணர் மருத்துவர் திருப்தி கிளடா இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோ காட்சியில், " படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில் மருத்துவர்கள் அனைவருமே மன அழுத்தத்தில் இருந்து வருகின்றனர். எங்களின் கண்முன்னே பல நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்து எங்களால் உதவ முடியாத சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். 

இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாக உள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Doctor Request to Indian Peoples 21 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->