முதலாளியோ… வேலைக்காரனோ… யாரும் கிடையாது -  மகாராஷ்டிர முதல்வர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஹிண்டே எங்கள் கட்சியில் முதலாளியோ வேலைக்காரனோ யாரும் கிடையாது என தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மே 20 ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களால் கொண்ட தொகுதியாக மகாராஷ்டிரம் உள்ளது. 

இங்கு பாஜக, ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவர் கூட்டணியாகவும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத் பாவர் மற்றொரு கூட்டணியாகவும் தேர்தலை சந்திக்க உள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவின் வாரிசு அரசியலை விமர்சனம் செய்துள்ளார். அதாவது நான் முதல்வர். ஆனால் இப்போதும் ஒரு தொண்டனாக பணியாற்றுகிறேன். 

எங்களது கட்சியில் முதலாளியோ அல்லது வேலைக்காரனோ யாரும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போம். எங்களது கட்சியில் ராஜாவின் மகன் ராஜாவாக மாட்டான். 

வேலை செய்பவன் தான் ராஜாவாக இருப்பான். ஆனால் அவர்கள் எங்களது வீட்டை வேலைக்காரர்களாக கருதுகின்றனர். ஒரு கட்சியையும் அல்லது அரசையோ வீட்டில் அமர்ந்து நடத்தக்கூடாது. 

வருகின்ற மக்களவைத் தேர்தலில் எங்களது கூட்டணி கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Chief Minister Eknath Hinde speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->