முகக்கவசம் ஆர்டர் செய்து ரூ.3 இலட்சத்தை இழந்த தொழிலதிபர்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை போரிவளி பகுதியில் இணையத்தளம் வாயிலாக தொழிலதிபர் ரூ.2.50 இலட்சத்திற்கும் அதிகமாக ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. 

கடந்த 21 ஆம் தேதியன்று தொழிலதிபர் இணையத்தின் மூலமாக முகக்கவசம் வாங்க இணையதள விளம்பரத்தின் அடிப்படையில் அலைபேசியில் குறித்த நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேசிய நபர், முகக்கவசம் உற்பத்தி தொழிற்சாலை வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். 

இதனையடுத்து ஒரு இலட்சம் முகக்கவசம் வேண்டும் என்று கூறவே, ஒரு இலட்சம் எண்ணிக்கையிலான முகக்கவசம் என்பதால் ஆர்டருக்கு முன்தொகை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து ரூ.1.65 கோடிக்கு முககவசம் ஆர்டர் செய்த நிலையில், ரூ.2.93 இலட்சத்தை முன் தொகையாக செலுத்தியுள்ளார். 

பின்னர் நாட்கள் கடந்தும் முகக்கவசம் வராமல் இருந்த நிலையில், ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். பணம் கொடுப்பதாக கூறிய நபரும், பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும், பணத்தை கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் தொழிலதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra business man cheated


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->