கர்ப்பிணி பெண் வனத்துறை அதிகாரி மீது மோசமான தாக்குதல்.! வைரலாகும் பகீர் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்சவடே கிராமத்திற்கு அருகில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. இது வனத் துறை கட்டுப்பாட்டின் கீழ் அமைந்து இருக்கிறது. மாவட்ட வனத்துறை ரேஞ்சராக இப்பகுதியில் பெண் அதிகாரி பணியாற்றி வருகின்றார். தற்போது அந்த பெண் அதிகாரி மூன்று மாத கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறார்.

அப்பொழுது வனத்துறை உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் நபர் பெண் வனத்துறை அதிகாரியிடம், "வனத்துறையின் கீழ் பணியாற்றி வருகின்ற ஒப்பந்த தொழிலாளர்களை அனுமதி பெறாமல் அழைத்துச் சென்றது ஏன்?" என்று கூறி தகராறு செய்துள்ளார். இந்த தகராறில் வனத்துறை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து கர்ப்பிணியான பெண் அதிகாரியை தாக்க ஆரம்பித்துள்ளனர்.

அவரது கையை முறித்து கீழே தள்ளிவிட்டு அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது. தற்போது பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். பெண்ணை தாக்கிய தம்பதியினர் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra attack video


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->