லட்சத்தீவு தொகுதியில் இடைத் தேர்தலை நிறுத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் லட்சத்தீவு மக்களவை தொகுதியின் எம்.பி.யாக உள்ளவர் முகமது பைசல். இவர் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் பி.எம்.சயீதின் மருமகனான முகமது சாலியை கொலை செய்ய முயன்றதாக எம்.பி உள்பட நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை, கடந்த 11-ந்தேதி லட்சத்தீவில் கவரட்டியில் உள்ள செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, எம்.பி. உள்பட நான்கு பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

பொதுவாக மக்கள் பிரதிநிதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலே அவர் பதவி இழப்பார். அந்த வகையில், முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. மேலும், லட்சத்தீவு தொகுதி காலியாக இருப்பதால் அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இதையறிந்த, முகமது பைசல் தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்தார். அதை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், முகமது பைசல் மீதான குற்ற நிரூபணத்தையும், சிறைத்தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. 

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு படி, லட்சத்தீவுக்கான இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்து, அதற்கான அறிவிக்கை வெளியிடுவதையும் தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakshadweep election stop Election Commission allounce


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal