திடீர் திருப்பம்: "தேர்தலில் போட்டியிடப் போவதில்லை".! ஜேபி நட்டாவுக்கு கே.எஸ் ஈஸ்வரப்பா கடிதம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு பா.ஜ.க.வும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு  வருகின்றன.  இந்நிலையில் சிவமொக்கா பாஜக எம்எல்ஏவும், முன்னாள் துணை முதலமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, வருகின்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நான் தேர்தல் அரசியலில் இருந்து விருப்ப ஓய்வு பெற விரும்புகிறேன். எனவே இந்த சட்டமன்ற தேர்தலில் எனது பெயரை எந்த தொகுதிக்கும் பரிசீலிக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில் பூத் பொறுப்பாளராக இருந்து மாநிலத்தின் துணை முதல்வர் வரை கவுரவ அந்தஸ்தை வழங்கிய கட்சி பெரியவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KS Eshwarappa letter to JP Natta who is not going to contest the Karnataka assembly elections


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->